/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பாலியல் குற்றம் சாட்டப்பட்ட தலைமையாசிரியர் தற்கொலை
/
பாலியல் குற்றம் சாட்டப்பட்ட தலைமையாசிரியர் தற்கொலை
பாலியல் குற்றம் சாட்டப்பட்ட தலைமையாசிரியர் தற்கொலை
பாலியல் குற்றம் சாட்டப்பட்ட தலைமையாசிரியர் தற்கொலை
ADDED : பிப் 20, 2025 07:11 AM

சாயல்குடி; பள்ளி மாணவிகளிடம் பாலியல் ரீதியில் தொல்லை செய்ததாக குற்றச்சாட்டுக்கு ஆளான பள்ளி தலைமை ஆசிரியர் நேற்று வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே மாரியூர் ஊராட்சி மேலமுந்தல் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. இங்கு 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். தலைமை ஆசிரியராக சேட் அயூப்கான் 58, பணிபுரிந்து வந்தார். அருகில் உள்ள மாரியூரில் குடும்பத்துடன் வசித்தார்.
இவர் சில மாதங்களாக மாணவிகளிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டுள்ளார். பாதிக்கப்பட்ட மாணவிகள் பெற்றோரிடம் கூறியதால் அவர்கள் தலைமை ஆசிரியரை எச்சரித்தனர். இந்த தகவல் சுற்றுவட்டார கிராமங்களில் பரவியது.
இதையடுத்து கடலாடி வட்டார தொடக்கக் கல்வி அலுவலர் ருக்மணி தேவி, கீழக்கரை அனைத்து மகளிர் போலீசார் நேற்று முன்தினம் மதியம் பள்ளிக்கு சென்று தலைமை ஆசிரியர் சேக் அயூப்கானிடம் விசாரித்தனர். இதனால் மனமுடைந்த சேட் அயூப்கான் வீட்டில் உள்ள தனது அறையில் இரவு 11:00 மணிக்கு துாக்கிட்டு தற்கொலை செய்தார். இவருக்கு மனைவி, இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.

