ADDED : மே 16, 2025 03:06 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சீதக்காதி சேதுபதி விளையாட்டு அரங்கத்தில் 21 நாள் கோடைகால பயிற்சி முகாம் நிறைவு விழா நடந்தது.
ஏப்.,24 முதல் மே 15 வரை நடந்த கோடைகால பயிற்சி முகாமில் கால்பந்து, தடகளம், ஹாக்கி, இறகு பந்து, டென்னிஸ், ஜூடோ போன்ற விளையாட்டுகளில் 500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். மாவட்ட விளையாட்டு அலுவலர் தினேஷ் மேற்பார்வையில் பயிற்சியாளர்கள், மணிகண்டன், ஹனிபா, சசிகுமார், ரஞ்சித் மூலம் வீரர்களுக்கு உடற் திறனாய்வு, மன வலிமை, விளையாட்டு விழிப்புணர்வு பயிற்சிகள் வழங்கப்பட்டது.
தினமும் உடற்பயிற்சிகளுடன் பழங்கள், ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கினர். 21 நாள் பயிற்சி நிறைவு விழாவில் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. சிறப்பு விருந்தினராக மாவட்ட உளவுப்பிரிவு இன்ஸ்பெக்டர் மாரியப்பன், மாவட்ட ஹாக்கி சங்க செயலாளர் கிழவன் சேதுபதி, வள்ளுவன் பள்ளி தாளாளர் மணிமாறன் பங்கேற்றனர்.