/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சுந்தரராஜ பெருமாள் தைலக்காப்பு உற்ஸவம் கங்கை தீர்த்தம் அபிஷேகம்
/
சுந்தரராஜ பெருமாள் தைலக்காப்பு உற்ஸவம் கங்கை தீர்த்தம் அபிஷேகம்
சுந்தரராஜ பெருமாள் தைலக்காப்பு உற்ஸவம் கங்கை தீர்த்தம் அபிஷேகம்
சுந்தரராஜ பெருமாள் தைலக்காப்பு உற்ஸவம் கங்கை தீர்த்தம் அபிஷேகம்
ADDED : நவ 02, 2025 10:46 PM

பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் தைலக்காப்பு உற்ஸவத்தை ஒட்டி சயன திருக்கோலத்தில் பெருமாள் எழுந்தருளினார்.
பரமக்குடி சவுராஷ்டிர பிராமண மகாஜனங்களுக்கு சொந்தமான சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானம், சவுந்தரவல்லி தாயார், சுந்தரராஜ பெருமாள் கோயில் உள்ளது. மேலும் மதுரை அழகர் கோவிலை போன்று மூலவர் பரமசுவாமி, ஸ்ரீதேவி, பூதேவி தாயருடன் வீற்றிருக்கிறார்.
தொடர்ந்து மதுரை அழகர்கோவிலில் தொட்டி உற்ஸவம் எனப்படும் தைலக்காப்பு விழா ஆண்டுதோறும் நடக்கிறது.
இந்நிலையில் பரமக்குடி பெருமாள் கோயிலில் நேற்று முன் தினம் இரவு பெருமாள் சயன திருக்கோலத்தில் எழுந்தருளி விழா துவங்கியது.
அப்போது பெருமாளுக்கு கொண்டையிட்டு தைலம் தேய்த்து நுாற்புர கங்கை தீர்த்தத்தில் அபிஷேகம் நடக்கிறது. மேலும் ஊஞ்சல் சேவை நிறைவடைந்து, 5ம் நாள் கருட வாகன சேவையில் பெருமாள் பூஜைகள் நடக்கிறது.