/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தேசிய பளு துாக்கும் போட்டிக்கு பரமக்குடி பள்ளி மாணவி தேர்வு
/
தேசிய பளு துாக்கும் போட்டிக்கு பரமக்குடி பள்ளி மாணவி தேர்வு
தேசிய பளு துாக்கும் போட்டிக்கு பரமக்குடி பள்ளி மாணவி தேர்வு
தேசிய பளு துாக்கும் போட்டிக்கு பரமக்குடி பள்ளி மாணவி தேர்வு
ADDED : நவ 02, 2025 10:46 PM

பரமக்குடி: 2025 அகில இந்திய பள்ளிகளுக்கு இடையிலான தேசிய அளவிலான (எஸ்.ஜி.எப்.ஐ.,) பளு துாக்கும் போட்டிக்கு தமிழ்நாடு அணிக்கான தேர்வு புதுக்கோட்டையில் நடந்தது.
இதில், பரமக்குடி எமனேஸ்வரம் அரசு பள்ளி 9ம் வகுப்பு மாணவி என்.எஸ்.வைஷ்ணவி 14, 48 கிலோ உடல் எடை பிரிவில் பங்கேற்றார்.
இவர் ஸ்னாட்ஸ் முறையில் 49 கிலோவும், கிளீன் அண்டு ஜெர்க் முறையில் 63 கிலோ எடை என ஒட்டுமொத்தமாக 112 கிலோ எடை துாக்கி தங்க பதக்கம் வென்றார்.
இதன்படி இம்மாதம் அருணாச்சல பிரதேசத்தில் நடக்கவுள்ள தேசிய போட்டிக்கு தேர்வாகி தமிழகம் சார்பில் பங்கேற்க உள்ளார்.
மாணவிக்கு பயிற்சி அளித்த பிரண்ட்ஸ் ஜிம் ஆசிரியர்கள், நிர்வாகிகள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் வாழ்த்தினர்.