தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ சூப்பர் ரிப்போர்டர்..

சூப்பர் ரிப்போர்டர்..

சூப்பர் ரிப்போர்டர்..


ADDED : அக் 31, 2025 11:40 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 31, 2025 11:40 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எரியாத மின்விளக்கு

ராமநாதபுரத்தில் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சென்டர் மீடியனில் மின் விளக்குகள் அடிக்கடி பழுதாகி இருள் சூழ்ந்து விடுகிறது. எரியாத மின்விளக்குகளை சரிசெய்ய நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- மாதவன், ராமநாதபுரம்.

பன்றிகளால் தொல்லை

ராமநாதபுரம் ரயில்வே பீடர் ரோட்டில் குறுக்கே வரும் பன்றிகளால் விபத்து அபாயம் உள்ளது. பன்றி வளர்ப்போரை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- முகமது மீரான், புதுநகர்.

குப்பையால் துர்நாற்றம்

ராமநாதபுரம் அருகே சக்கரகோட்டை வ.உ.சி., நகரில் குப்பை அள்ளப்படாமல் குவிந்துள்ளதால் துர்நாற்றம் வீசுவதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. ஊராட்சி நிர்வாகம் அகற்ற வேண்டும்.

- சிவா, சக்கரகோட்டை

நாய்கள் தொல்லை

ராமநாதபுரம் சின்னக்கடை வீதியில் நாய்களின் தொல்லையால் இரவில் நடந்து செல்ல முடியவில்லை. அவற்றை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.

- முஸ்தபா, சின்னக்கடை வீதி .

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us