
மின்கம்பத்தால் ஆபத்து
நாடார் வலசையில் இருந்து அழகன்குளம் செல்லும் ரோட்டோர மின்கம்பத்தின் ஒரு பகுதி உடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்
- புலவர் நிஜாம், அழகன்குளம்.
மாசடையும் ஊருணி
ராமநாதபுரம் நொச்சியூருணிக்குள் ஒட்டியுள்ள குடியிருப்பு பகுதியில் இருந்து குப்பை கொட்டு வதால் ஊருணி மாசடைகிறது. நகராட்சி நிர்வாகம் அப்பகுதியில் குப்பை கொட்டாதவாறு தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சிவா, ராமநாதபுரம்.
குண்டும் குழியுமான ரோடு
பனைக்குளம் மெயின் ரோடு சேதமடைந்துள்ளதால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயம் உள்ளது. ஊராட்சி நிர்வாகத்தினர் உடன் சீரமைக்க வேண்டும்.
மிரட்டும் தெருநாய்கள்
அச்சுந்தன்வயல் மதுரை மெயின் ரோட்டில் திரியும் நாய்களால் இரவு நேரத்தில் விபத்து அபாயம் உள்ளது. நாய்களை பிடிக்க ஊராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- லட்சுமி, அச்சுந்தன்வயல்.
கழிவறை வசதியின்றி அவதி
ராமநாதபுரம் அரண்மனை பஜார் பகுதியில் பொதுகழிப்பிட வசதியின்றி வியாபாரிகள், பயணிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். நகராட்சி நிர்வாகத்தினர் அப்பகுதியில் சுகாதாரவளாகம் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்.
- மனோகரன், ராமநாதபுரம்.

