/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அப்பனேந்தல் கிராமத்திற்கு காவிரி குடிநீர் வழங்கல்
/
அப்பனேந்தல் கிராமத்திற்கு காவிரி குடிநீர் வழங்கல்
ADDED : அக் 07, 2025 03:50 AM
முதுகுளத்துார்: தினமலர் செய்தி எதிரொலியாக முதுகுளத்துார் அருகே அப்பனேந்தல், நாகனேந்தல் கிராமத்தில் காவிரி குடிநீர் விநியோகிக்கப்பட்டது.
அப்பனேந்தல், நாகனேந்தல் கிராமத்தில் 100க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர்.கிராமத்திற்கு கடந்த ஒரு மாதத்திற்கு மேலாகவே காவிரி குடிநீர் வரவில்லை.இதனால் டிராக்டர் தண்ணீரை குடம் ரூ.15 விலைக்கு வாங்கி பயன்படுத்துகின்றனர்.
டிராக்டர் வராதபோது 3 கி.மீ., நடந்து சென்று கே.ஆர்.பட்டிணம் நீரேற்று நிலையத்தில் இருந்த தள்ளுவண்டி தண்ணீர் எடுத்து வந்து பயன்படுத்துகின்றனர். இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அப்பனேந்தல், நாகனேந்தல் கிராமத்தில் குழாய் பராமரிப்பு செய்து குடிநீர் வழங்கினர்.