/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஆற்றாங்கரை பகுதியில் 19 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைப்பு
/
ஆற்றாங்கரை பகுதியில் 19 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைப்பு
ஆற்றாங்கரை பகுதியில் 19 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைப்பு
ஆற்றாங்கரை பகுதியில் 19 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைப்பு
ADDED : பிப் 01, 2025 05:00 AM

ராமநாதபுரம்: -ராமநாதபுரம் அருகே ஆற்றாங்கரை பகுதியில் ஜமாத் சார்பில் 19 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
ஆற்றாங்கரை பகுதியில் முஸ்லிம் ஜமாத் சார்பில் 19 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு அதற்கான கட்டுப்பாட்டு அறை திறப்பு விழா நடந்தது. ஜமாத் தலைவர் கே.பி.சவுகார் தலைமை வகித்தார். முன்னாள் ஊராட்சித் தலைவர் முகமது அலி ஜின்னா வரவேற்றார்.
சந்தீஷ் எஸ்.பி., பங்கேற்று கேமரா கட்டுப்பாட்டு அறையை திறந்து வைத்தார். உச்சிப்புளி இன்ஸ்பெக்டர் மருதுபாண்டி, முன்னாள் ஊராட்சி துணைத்தலைவர் நுாருல் அபான், ஊராட்சி செயலாளர் கண்ணன், தி.மு.க., கிளை செயலாளர் அபுல் மற்றும் நாகராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.
ஏற்பாடுகளை நாகூர் கனி செய்திருந்தார். நிகழ்ச்சியில் முஸ்லிம் தெரு, கிறிஸ்தவ தெரு, யாதவ தெரு, வடக்குத்தெரு, காந்திநகர் உள்ளிட்ட கிராமத்தலைவர்கள் பங்கேற்றனர்.