/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஆனந்துாரில் செயலிழந்தன கண்காணிப்பு கேமராக்கள்
/
ஆனந்துாரில் செயலிழந்தன கண்காணிப்பு கேமராக்கள்
ADDED : ஏப் 04, 2025 06:31 AM

ஆர்.எஸ்.மங்கலம்: ஆனந்துார் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி., கேமரா பழுதடைந்த நிலையில் உள்ளதால் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை உடனடியாக கண்டறிவதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஆர்.எஸ்.மங்கலம் அருகே ஆனந்துார் 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மையப்பகுதியாக உள்ளது. ஆனந்துார் பஸ் ஸ்டாண்டில் இருந்து சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட பெரு நகரங்களுக்கு செல்லும் வகையில் பஸ் போக்குவரத்து உள்ளதால் தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்லும் பகுதியாக உள்ளது.
இந்நிலையில், கூட்டம் அதிகம் கூடும் பகுதிகளில் கண்காணிப்பு மேற்கொள்ளும் வகையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஆனந்துார் பஸ் ஸ்டாண்ட் அருகில் சி.சி.டி.வி., கேமரா பொருத்தப்பட்டது. இந்நிலையில், சிசிடிவி கேமராக்கள் முறையாக பராமரிப்பு செய்யப்படாததால் பழுதடைந்துள்ளன.
இதனால், அப்பகுதியில் நடைபெறும் குற்றச் செயல்களை உடனடியாக கண்டறிவதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே அதிகாரிகள் பழுதடைந்த சி.சி.டி.வி., கேமராக்களை சீரமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.

