/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கீழக்கரை அரசு தாலுகா மருத்துவமனையில் ஆக்சிஜன் குழாய்களை திருடும் மர்ம நபர்கள் பாதுகாப்பில் கேள்விக்குறி

ADDED : நவ 20, 2024 06:34 AM

கீழக்கரை : கீழக்கரை அரசு தாலுகா மருத்துவமனையில் பாதுகாப்பு குறைபாட்டால் அங்குள்ள தளவாடப் பொருட்கள் திருடு போகும் அவலம் தொடர்கிறது.
கீழக்கரை அரசு தாலுகா மருத்துவமனையில் அனைத்து நவீன கட்டமைப்பு வசதிகளும் உள்ளது. உள் நோயாளிகளின் அறைகளில் ஒவ்வொரு படுக்கைக்கும் ஆக்சிஜன் குழாய்கள் செல்கிறது. இக்குழாய்கள் காப்பர் உலோகத்தால் ஆனது.
தீவிர சிகிச்சையில் இருக்கும் நோயாளிகளின் சுவாச பிரச்னையை சரி செய்வதற்கு உரிய ஆக்சிஜன் குழாய்கள் பல இடங்களில் பெயர்த்து எடுத்துள்ளனர் மர்ம நபர்கள். அவசர அத்தியாவசிய தேவைக்கு வரும் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்ட போது ஆக்சிஜன் குழாய் செல்லும் இடங்களில் காப்பர் உலோகத்தாலான குழாய்களை வெட்டி திருடியுள்ளனர். இது நடந்து பல நாட்களாகி விட்டது. தற்போது நோயாளிகளின் வசதிக்காக வேறொரு அறையில் உரிய எண்ணிக்கையில் சிகிச்சைக்கான ஆக்சிஜன் அளிக்கப்பட்டு வருகிறது என்றனர்.
எனவே கீழக்கரை தாலுகா அரசு மருத்துவமனைக்கு உரிய முறையில் கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.