ADDED : ஜூலை 12, 2026 01:17 AM

அ நிறம் | அளவு
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அறிஞர் அண்ணா நடுநிலைப்பள்ளியில் ராமநாதபுரம் மாவட்ட பென்சிங் விளையாட்டு கழகம் சார்பில் வாள் சண்டை பயிற்சி முகாம் நடந்தது.
சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த பயிற்சியாளர் சவுந்தரபாண்டியன், ரம்யா, தேசிகா பயிற்சியளித்தனர். ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் இருந்து 60 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். இங்கு பயிற்சி பெறுவோர், தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை சார்பில் மூன்று பிரிவுகளாக நடக்கும் வாள் சண்டை விளையாட்டு போட்டியில் பங்கேற்கவுள்ளனர். ராமநாதபுரத்தில் வாள் சண்டை விளையாட்டு முதன் முறையாகநடைபெற்றது. ராமநாதபுரம் செஸ் விளையாட்டு கழக செயலாளர் ரமேஷ், பொருளாளர் குணசேகரன், சிலம்பம் பயிற்சியாளர் மேத்யு இம்மானுவேல் பங்கேற்றனர்.
