/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வி.ஏ.ஓ., மீது தாசில்தார் புகார்
/
வி.ஏ.ஓ., மீது தாசில்தார் புகார்
ADDED : பிப் 05, 2025 02:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரமக்குடி:ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அவதுாறாக பேசியதாக காமன்கோட்டை வி.ஏ.ஓ., மீது தாசில்தார் போலீசில் புகார் அளித்துள்ளார்.
பரமக்குடி அருகே காமன்கோட்டை வி.ஏ.ஓ., யூனுஷ். இவர் ஜன.,10ல் தாலுகா அலுவலகத்தில் பொங்கல் விழா கொண்டாடிய போது லுங்கியுடன் சென்று அலுவலக பணியாளர்களை அவதுாறாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
மேலும் ஜன.,29 மாலை 5:45 மணிக்கு தாசில்தார் சாந்தியை பெண் பணியாளர்கள் முகம் சுளிக்கும் வகையில் இழிவாக பேசியுள்ளார். தாலுகா அலுவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாக தாசில்தார் சாந்தி பரமக்குடி தாலுகா போலீசில் இவர் மீது புகார் அளித்தார்.
எஸ்.ஐ., சண்முகவேல் முருகன் விசாரிக்கிறார்.