/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரத்தில் பிப்.12ல் தைப்பூச தெப்பத் தேரோட்டம்
/
ராமேஸ்வரத்தில் பிப்.12ல் தைப்பூச தெப்பத் தேரோட்டம்
ராமேஸ்வரத்தில் பிப்.12ல் தைப்பூச தெப்பத் தேரோட்டம்
ராமேஸ்வரத்தில் பிப்.12ல் தைப்பூச தெப்பத் தேரோட்டம்
ADDED : பிப் 10, 2025 04:33 AM

ராமேஸ்வரம்: -ராமேஸ்வரத்தில் பிப்., 12ல் (நாளை மறுநாள்) தைப்பூச தெப்ப தேரோட்டம் நடக்கிறது. இதையொட்டி, கோயில் தீர்த்த குளத்தில் தெப்பத்தேர் அலங்கரித்து தயார் நிலையில் உள்ளது.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் உபகோயிலான லட்சுமணேஸ்வரர் தீர்த்த குளத்தில் பிப்.,12ல் தைப்பூசம். தெப்பத் தேரோட்டம் நடக்க உள்ளது.
அன்று கோயில் இருந்து ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மன், பஞ்சமூர்த்திகளுடன் புறப்பாடாகி லட்சுமணேஸ்வரர் கோயிலில் எழுந்தருள்வர். பின் இரவு தீர்த்த குளத்தில் உள்ள தெப்பத்தேரில் சுவாமி, அம்மன் எழுந்தருளியதும், தெப்பர் தேர் வலம் வரும். இவ்விழா யொட்டி லட்சுமணேஸ்வரர் தீர்த்த குளம் சுற்றுச்சுவரில் வர்ணம் பூசி, தைப்பூச தெப்ப தேர் அலங்கரிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது.