sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

திறன்மிகு விளையாட்டு வீரர்கள் சிறப்பு உதவித்தொகை பெறலாம்

/

திறன்மிகு விளையாட்டு வீரர்கள் சிறப்பு உதவித்தொகை பெறலாம்

திறன்மிகு விளையாட்டு வீரர்கள் சிறப்பு உதவித்தொகை பெறலாம்

திறன்மிகு விளையாட்டு வீரர்கள் சிறப்பு உதவித்தொகை பெறலாம்


ADDED : ஆக 19, 2025 11:39 PM

Google News

ADDED : ஆக 19, 2025 11:39 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம் : மாவட்டத்திலுள்ள திறன்மிகு விரையாட்டு வீரர்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் சிறப்பு உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால், தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித் தொகைத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வெல்வதற்கு ஊக்கபடுத்தும் விதமாகவும், விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பயன் பெறும் வகையில் வழங்கப்படுகிறது.

விருப்பமுள்ள விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் இணையதளம் www.sdat.tn.gov.in என்ற இணையதளம் மூலம் மட்டும் செப்.,8 க்குள் விண்ணப்பிக்கலாம். அஞ்சல் வழி மற்றும் நேரடி விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

இத்திட்டங்களில் பயன்பெற வீரர்கள் தமிழ்நாட்டில் வசிப்ப வராக இருக்க வேண்டும். கடந்த 2 ஆண்டுகளில் பெற்ற விளையாட்டு சாதனைகள் தகுதியானதாக கருதப்படும்.

வயது பிரிவு அடிப் படையில் பங்கேற்றிடும் தேசிய சாம் பியன்ஷிப் போட்டியில் பதக்கம் பெற்றிருந்தால் அதற்குரிய சான்றிதழ் இணைக்க வேண்டும்.

4 ஆண்டு காலத்தில் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாட்டின் சார்பாக பங்கேற்றிருத்தல் வேண்டும்.

விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலரால் அமைக்கப்பட்ட ஆய்வு குழு மூலம் முறையாக பரிசீலனை செய்யப்பட்டு அதனடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்படுவார்.

நிபந்தனைகளுக்கு உட்பட்டு அதிகபட்சம் 2 ஆண்டுகள் வரை இத்திட்டத்திற்கான உதவித்தொகை வழங்கப்படும்.

மேலும் விபரங்களுக்கு ஆடுகளம் தகவல் மையம் 95140 00777 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட விளையாட்டு, இளைஞர் நலன் அலு வலர் தினேஷ்குமார் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us