/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஆசிரியர்கள் அரசு ஊழியர் ஊர்வலம்
/
ஆசிரியர்கள் அரசு ஊழியர் ஊர்வலம்
ADDED : ஜன 11, 2025 06:26 AM
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்ட சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம் சார்பில்சி.பி.எஸ்., திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி ஊர்வலம் நடத்தினர்.
ராமநாதபுரம் அருகே டி-.பிளாக் பஸ் ஸ்டாப் அருகில் இருந்து துவங்கி ஊர்வலமாக கலெக்டர் அலுவலகம் வரை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சென்றனர்.
சி.பி.எஸ்., இயக்க மாநில இணை ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார் தலைமை வகித்தார். ஓய்வு பெறும் நாளில் கை நிறைய சம்பளம் பெற்று விட்டு அடுத்த மாதம் மற்றவர்களை பார்த்து கையேந்தி வாழும் அவல நிலை யாருக்கும் வரக்கூடாது.
தி.மு.க., அரசு தேர்தல் வாக்குறுதியின் படி பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தினர். மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் செல்வக்குமுார், இணை ஒருங்கிணைப்பாளர் சீனி முகமது, வருவாய்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் பழனிக்குமார், ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.