ADDED : ஜன 14, 2026 05:37 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடை நிலை பதவி மூப்புஆசிரியர்களுக்கு ஆதரவு தெரிவித்து ராமநாதபுரம் மாவட்ட தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் கலெக்டர் அலுவலகம் அருகே கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் சாமியய்யா தலைமை வகித்தார்.செயலாளர்சிவபாலன், பொருளாளர் கதிரவன் முன்னிலை வகித்தனர். சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி இடை நிலைஆசிரியர்கள் காலவரையற்ற போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இப்போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர இடைநிலை ஆசிரியர்களைஅழைத்து பேசி அவர்களின் கோரிக்கைகளுக்கு அரசு தீர்வு காணவேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர்.
மாவட்ட துணைத் தலைவர்ராஜேஸ்வரி உட்பட ஆசிரியர்கள் பலர் பங்கேற்றனர்.

