/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை வலியுறுத்தும் பணியில் ஆசிரியர்கள்
/
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை வலியுறுத்தும் பணியில் ஆசிரியர்கள்
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை வலியுறுத்தும் பணியில் ஆசிரியர்கள்
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை வலியுறுத்தும் பணியில் ஆசிரியர்கள்
ADDED : மே 01, 2025 06:15 AM
திருவாடானை: திருவாடானை ஒன்றியத்தில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க ஆசிரியர்கள் வீடு வீடாக சென்று தீவிரம் காட்டுகின்றனர். ஆசிரியர்கள் கூறியதாவது:
அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என கல்வித்துறை அறிவுரை வழங்கியுள்ளது. திருவாடானை ஒன்றியத்தில் 79 அரசு தொடக்கப்பள்ளிகள், 19 நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலை, மேல்நிலை பள்ளிகள் என 112 பள்ளிகள் உள்ளன.
அங்கன்வாடி மையங்களில் முன் பருவ கல்வியை நிறைவு செய்யும் ஐந்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை அந்தந்த பகுதியில் உள்ள அரசு தொடக்க பள்ளிகளில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டு வருகின்றன.
அதே போல் உயர்நிலை மற்றும் மேல்நிலைபள்ளி ஆசிரியர்கள் அருகே உள்ள தொடக்கப்பள்ளியில் படித்த மாணவர்களிடம் கேன்வாஸ் செய்து வருகின்றனர்.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் பல்வேறு நலத் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறப்பதற்கு முன் கடந்த ஆண்டை காட்டிலும் கூடுதலாக மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள் என்றனர்.