UPDATED : நவ 19, 2026 08:10 PM
ADDED : நவ 19, 2026 08:06 PM
அ நிறம் | அளவு
முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே பாப்பனேந்தல் கிராமத்தில் முனீஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு பக்தர்கள் நேர்த்தி கடனாக மணிகள் கட்டியுள்ளனர். கோயில் திருப்பணி நடப்பதால் கடந்த சில நாட்களுக்கு முன்பு மூலவரை பாலாலயம் செய்து தனி அறையில் அமர்த்தினர். மணி உள்ளிட்ட பொருட்களையும் மற்றொரு அறையில் வைத்துள்ளனர்.
பூஜைக்காக சுப்பிரமணி கோயிலை திறக்க வந்த போது மணிகள் திருடு போனது தெரிய வந்தது. இதன் மதிப்பு ரூ.50 ஆயிரம். கீழத்துாவல் போலீசார் விசாரிக்கின்றனர்.
