தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/உறங்கும் போது திரவப் பாதுகாப்பு வளையத்திற்குள் இருக்கும் கிளிமீன்

உறங்கும் போது திரவப் பாதுகாப்பு வளையத்திற்குள் இருக்கும் கிளிமீன்

உறங்கும் போது திரவப் பாதுகாப்பு வளையத்திற்குள் இருக்கும் கிளிமீன்


UPDATED : நவ 19, 2026 08:39 PM

ADDED : நவ 19, 2026 08:36 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 19, 2026 08:39 PM ADDED : நவ 19, 2026 08:36 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சாயல்குடி: ராமநாதபுரம் அருகே, மன்னார் வளைகுடா கடலில் வாழும் கிளிமீன்கள், உறங்கும் போது எதிரிகளிடம் இருந்து தங்களை காக்க திரவப் பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்துகின்றன.

கிளிமீன்களின் பற்கள் ஒன்றாக இணைந்து, கிளியின் அலகை போன்ற உறுதியான அமைப்பை கொண்டிருக்கும். இவற்றின் உடல் பச்சை, நீலம், சிவப்பு, மஞ்சள் என, பளபளப்பான வண்ணங்களில் காணப்படுவதால் ‘கிளிமீன்’ என்றழைக்கப்படுகிறது.

இவை, மன்னார் வளைகுடா போன்ற பவளப்பாறைகள் நிறைந்த ஆழம் குறைந்த கடல் பகுதிகளில் அதிகம் காணப்படுகின்றன. பவளப்பாறைகளின் மீது படர்ந்திருக்கும் கடல்பாசிகளை இவை உண்கின்றன.

எதிரிகளிடமிருந்து தங்களை காத்துக்கொள்ள வாயிலிருந்து சுரக்கும் ஒருவித சளி போன்ற திரவத்தால், உடலை சுற்றி ஒரு பாதுகாப்பு கூட்டை உருவாக்கிக் கொண்டு உறங்குகின்றன. மன்னார் வளைகுடா பகுதிகளில், பச்சை கிளிமீன், நீல கிளிமீன் உட்பட, 10 விதமான கிளிமீன் வாழ்கின்றன.

இவை கிலோ, 300 முதல், 400 ரூபாய் வரை விற்பனையாகின்றன. இவற்றின் சதைப்பகுதி மென்மையாகவும், முட்கள் குறைவாகவும் இருப்பதால், குழம்பு, வறுவலுக்கு மிகவும் ஏற்றவை.

பவளப்பாறைகளின் ஆரோக்கியத்திற்கு கிளிமீன்கள் பங்கு அவசியம் என்பதால், சிறிய அளவிலான குஞ்சு கிளிமீன்களை பிடிப்பதை தவிர்க்குமாறு கடல்சார் ஆராய்ச்சியாளர்கள், மீனவர்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us