/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கடலாடியில் கோயில் பூஜாரிகள் சங்க பொறுப்பாளர்கள் கூட்டம்
/
கடலாடியில் கோயில் பூஜாரிகள் சங்க பொறுப்பாளர்கள் கூட்டம்
கடலாடியில் கோயில் பூஜாரிகள் சங்க பொறுப்பாளர்கள் கூட்டம்
கடலாடியில் கோயில் பூஜாரிகள் சங்க பொறுப்பாளர்கள் கூட்டம்
ADDED : அக் 13, 2025 03:59 AM
கடலாடி: -ராமநாதபுரம் மாவட்ட கோவில் பூஜாரிகள் நல சங்க மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் கடலாடியில் நடந்தது.
மூத்த பூஜாரி பரம் பொருள் காளிமுத்து தலைமை வகித்தார். கோயில் பூஜாரிகள் நலச்சங்க மாவட்ட பொருளாளர் கூரியைய்யா முன்னிலை வகித்தார்.
அமைப்பின் தென் மண்டல தலைவர் சண்முகசுந்தரம் சிறப்புரை ஆற்றினார். சங்க செயலாளர் தேவராஜன் வரவேற்றார்.
இதில், பூஜாரிகள் நலவாரியம் மூலம் உறுப்பினர் அட்டை வழங்கப்படுகிறது. இரண்டு வருடம் முடிந்து புதுப்பிக்க வேண்டும். அட்டை வழங்க காலதாமதம் செய்வதால் சலுகைகளை பெற அட்டை இணைக்கும் பொழுது காலாவதி ஆகிவிட்டது எனக் கூறி மனுவை திருப்பி அனுப்பு கின்றனர். இக்குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும். கால பூஜை திட்டத்தில் பயன்படும் கோயில்களின் முன் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் உள்ளிட்ட தீர் மானங்கள் நிறைவேற்றப் பட்டது.
மாவட்ட தலைவர் சந்தனகுமார், மாவட்டத் துணைத் தலைவர் அய்யக்குமார், மாவட்ட மகளிர் அணி சண்முக சுந்தரி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து பூஜாரிகள் பங்கேற்றனர்.