ADDED : செப் 22, 2026 02:09 AM
அ நிறம் | அளவு
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அரண்மனையில் உள்ள அலுவலகத்தில் கிராம கோயில் பூஜாரிகள் பேரவை கூட்டம் நடந்தது. மாவட்ட அமைப்பாளர் சுதாகரன் தலைமை வகித்தார்.
முன்னாள் அகில உலக விஸ்வ ஹிந்து பரிஷத் செயல் தலைவரும், கோயில் பூஜாரிகள் பேரவை நிறுவனர் வேதாந்தம் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
நலவாரிய உதவித்தொகையை உடனடியாக வழங்க வேண்டும். கோயிலுக்கு பூஜை பொருட்களை அரசு வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மண்டல அமைப்பாளர் ராமேஸ்வரம் சரவணன், நிர்வாகிகள், பூஜாரிகள் பலர் பங்கேற்றனர். நிர்வாகி அன்புமாறன் நன்றி கூறினார்.
