/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஹிந்து சமய அறநிலையத்துறையின் அவல நிலையை சரி செய்ய வேண்டும் கோயில் பூஜாரிகள் நலச்சங்கம் கோரிக்கை

ADDED : ஆக 21, 2025 11:11 PM
கடலாடி: ஹிந்து சமய அற நிலையத்துறையில் அவல நிலையை சரி செய்ய வேண்டும். பூஜாரிகள் கோரிக்கைகளை நிறை வேற்ற வேண்டும். தேர்தல் வாக்குறுதிகள் கானல் நீராக உள்ளதாக பூஜாரிகள் தெரிவித்தனர்.
கடலாடியைச் சேர்ந்த கோயில் பூஜாரிகள் நலச்சங்கத்தின் தென் மண்டல தலைவர் சண்முகசுந்தரம் பூஜாரி கூறியதாவது:
ஹிந்து சமய அற நிலையத்துறையில் நிலவும் அவல நிலையை போக்க வேண்டும். நலவாரிய அலுவல் சாரா உறுப் பினர்கள் இதுவரை நியமிக்கவில்லை. ஒரு கால பூஜை செய்யும் பூஜாரி களுக்கு அடையாள அட்டை வழங்க நீதிமன்றம் உத்தரவு இருந்தும் இன்னும் வழங்கப்படவில்லை. ஒரு கால பூஜை திட்டம் பெறும் கோயிலில் அறிவிப்பு பலகை முறையாக வைக்கப்படவில்லை.
பெயரளவிற்கு பேப்பரில் ஒட்டுகின்றனர். அவற்றை பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் அனைவரும் தெரியும் விதத்தில் விளம்பரப் போர்டாக வைக்க வேண்டும். கோயில் அதிகாரிகள் வருகை பதிவேடு, புகார் புத்தகம் எதுவும் இல்லை. அறிவிப்பு பலகை கண் துடைப்பாக வைக்கப் பட்டுள்ளது.
ஆறு மாதத்திற்கு ஒரு முறை ஓய்வூதியக் குழுவை கூட்ட வேண்டும்.
ஒருகால பூஜை நிதி மற்றும் ஊக்கத்தொகை கோயில் நிர்வாகிகள் பெயரில் வழங்கப்பட்டதை ஹிந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு தெரிவித்தும் கடந்த ஆட்சியில் வழங்கப்பட்ட நிர்வாகி பெயரில் தற்போது வரை வங்கி கணக்கு உள்ளது.
கோயில் இடங்களை கண்டறிந்து இவை கோயிலுக்கு சொந்தமான இடங்கள் என உணர்த்தக்கூடிய அறிவிப்பு பலகை வைக்க வில்லை. மாத ஊதியம் 1500 அறிவித்தது இன்னும் வழங்கவில்லை. எனவே தமிழக அரசு கோயில் பூஜாரி களின் துயரை போக்குவதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றார்.