/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
குறைதீர் கூட்டத்தில் 321 பேர் மனு மாணவிகளுக்கு முதல்வர் வாழ்த்து
/
குறைதீர் கூட்டத்தில் 321 பேர் மனு மாணவிகளுக்கு முதல்வர் வாழ்த்து
குறைதீர் கூட்டத்தில் 321 பேர் மனு மாணவிகளுக்கு முதல்வர் வாழ்த்து
குறைதீர் கூட்டத்தில் 321 பேர் மனு மாணவிகளுக்கு முதல்வர் வாழ்த்து
ADDED : பிப் 05, 2024 11:18 PM
ராமநாதபுரம்,- ராமநாதபுரத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில் பொது மக்களிடம் 321 மனுக்கள் பெறப்பட்டது. மாணவிகளுக்கு முதல்வரின் வாழ்த்து கடிதம் வழங்கப்பட்டது.
கூட்டத்திற்கு கலெக்டர் விஷ்ணுசந்திரன் தலைமை வகித்தார். புதுமைப்பெண் திட்டத்தில் பயன்பெறும் கல்லுாரி மாணவிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் வழங்கிய வாழ்த்து கடிதத்தை கலெக்டர் விஷ்ணு சந்திரன் வழங்கினார்.
வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை, தனிநபர் வீடு வழங்கும் திட்டம், குடிநீர் இணைப்பு வழங்குதல் உள்ளிட்ட 321 மனுக்கள் பெறப்பட்டன.
நிகழ்ச்சியில் சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் மாரிச்செல்வி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் கல்யாணசுந்தரம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பிரபாகரன் உள்ளிட்ட அலுவலர்கள் பங்கேற்றனர்.