/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பணி நியமன உத்தரவு கிடைத்தும் மூன்றாண்டாக வேலையில் சேர முடியாமல் சமையலர்கள் தவிப்பு
/
பணி நியமன உத்தரவு கிடைத்தும் மூன்றாண்டாக வேலையில் சேர முடியாமல் சமையலர்கள் தவிப்பு
பணி நியமன உத்தரவு கிடைத்தும் மூன்றாண்டாக வேலையில் சேர முடியாமல் சமையலர்கள் தவிப்பு
பணி நியமன உத்தரவு கிடைத்தும் மூன்றாண்டாக வேலையில் சேர முடியாமல் சமையலர்கள் தவிப்பு
ADDED : மார் 02, 2024 05:04 AM
ராமநாதபுரம் : பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதி சமையலர் பணியிடங்களுக்கு பணி நியமன ஆணை பெற்றவர்கள் பணியில் சேர முடியாமல் மூன்றாண்டுகளாக தவிக்கின்றனர்.
தமிழகத்தில் 2020 ஆக.,31ல் பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதிகளில் 954 சமையலர் காலி பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. இதில் 15 மாவட்டங்களில் இந்த காலி பணியிடங்கள் நிரப்ப தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதையடுத்து 2021 பிப்.,24ல் பிற்படுத்தப்பட்டோர் துறை இயக்குநர் பணி நியமனம் செய்து உத்தரவிட்டார்.
ராமநாதபுரம், துாத்துக்குடி, திண்டுக்கல் மாவட்டங்களில் பணிபுரிய 56 பேர் பணி நியமன ஆணை பெற்ற நிலையில் தமிழக சட்டசபை தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்ததால் அந்த பணியிடங்களை நிரப்ப முடியாமல் போனது. தேர்தல் முடிந்து புதிய ஆட்சி அமைந்த பின் தேர்தல் நடத்தை விதிமுறைகள் விலக்கிக் கொள்ளப்பட்ட பின் சென்னையில் பிற்பட்டோர் நலத்துறை செயலாளரை பணி நியமனம் பெற்றவர்கள் சந்தித்து பணியில் சேர நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொண்டனர்.
இந்நிலையில் 2021 நவ., 27 ல் பணி நியமன ஆணையை ரத்து செய்து உத்தரவிடப்பட்டது.
இதனை எதிர்த்து உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் பணி நியமனம் பெற்றவர்கள் வழக்கு தொடர்ந்தனர். நீதிபதி அனைவரையும் பணி நியமனம் செய்ய உத்தரவிட்டார்.
இதனை எதிர்த்து அரசு தரப்பில் மேல் முறையீடு செய்தனர். இந்நிலையில் பணி நியமன ஆணையை ரத்து செய்தது செல்லாது 2023 நவ.,7 ல் நீதிமன்றம் உத்தரவிட்டது.
நீதிமன்ற உத்தரவையும் மதிக்காமல் இதுவரை பணிநியமனம் செய்யாமல் அரசு இழுத்தடித்து வருவதால் பணி நியமனம் பெற்ற சமையலர்கள் தவிக்கின்றனர். அரசு உடனடியாக பணி நியமனம் செய்ய வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

