ADDED : செப் 13, 2025 11:27 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: ராமநாதபுரம் திரு வாடனை, மச்சூரில் 'உழவரைத் தேடி வேளாண் - உழவர் நலத்துறை' சிறப்பு முகாம் நடந்தது. விதை ஆய்வு துணை இயக்குநர் இப்ராம்சா தலைமை வகித்தார்.
அவர் பேசியதாவது:
விவசாயத்திற்கு மண், தண்ணீர் விதை ஆகியவை முக்கிய இடுபொருட் களாகும். காலநிலை மாற்றத்தால் இடு பொருட்களை பரி சோதனை செய்வது அவசியமாகிறது. அதனால் விவசாயிகள் தங்கள் நிலத்தின் மண், தண்ணீரை அவ்வப்போது பரி சோதனை செய்து கொள்ள வேண்டும்.
தரமான விதைகள் வாங்குவதற்கு விவசாயிகள் அரசு மற்றும் தனியார் விற்பனையாளர்களிடம் ரசீது கட்டாயம் பெற வேண்டும் என்றார். தொடர்ந்து விவசாயி களுக்கு ஊட்டச்சத்து விதைகள் வழங்கினார்.