sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

மன்னார் வளைகுடாவில் அரிய வகை நீலத் திமிங்கலங்கள்: வளம் கொழிக்கும் கடல் வளம்

/

மன்னார் வளைகுடாவில் அரிய வகை நீலத் திமிங்கலங்கள்: வளம் கொழிக்கும் கடல் வளம்

மன்னார் வளைகுடாவில் அரிய வகை நீலத் திமிங்கலங்கள்: வளம் கொழிக்கும் கடல் வளம்

மன்னார் வளைகுடாவில் அரிய வகை நீலத் திமிங்கலங்கள்: வளம் கொழிக்கும் கடல் வளம்


ADDED : அக் 31, 2025 11:45 PM

Google News

ADDED : அக் 31, 2025 11:45 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாயல்குடி: ராமநாதபுரம் மாவட்டத்தில் தனுஷ்கோடி முதல் துாத்துக்குடி மாவட்ட எல்லையான கன்னிராஜபுரம் வரை 140 கி.மீ.,க்கு பரந்து விரிந்த மன்னார் வளைகுடா கடற்கரை உள்ளது. இந்த மன்னார் வளைகுடா கடல் அரிய வகை உயிரினங்களின் சிறப்பு மிக்க வாழ்விடங்களாக திகழ்கிறது.

இங்கு மிகவும் அரிய வகைகளான நீலத்திமிங்கலம், கூன் முதுகுத்திமிங்கலம், பழுப்பு திமிங்கலங்கள் அதிகளவில் வாழ்கின்றன.

பெரிய திமிங்கலங்கள் பெரிய கிரிக்கெட் மைதானம் அளவு கொண்டது. மண்டபம், கீழக்கரை, சாயல்குடி மற்றும் துாத்துக்குடிக்கு உட்பட்ட பகுதிகளில் 21 தீவுகள் மன்னார் வளைகுடா கடலில் அமைந்து இயற்கையின் சமன்பாட்டில் உறுதுணையாக உள்ளது.

கடற்கரையில் இருந்து கடலில் 3 முதல் 12 நாட்டிக்கல் கடல் மைல் தொலைவில் தீவுகள் குறிப்பிட்ட தொலைவிற்கு அமைந்துள்ளன.

ஆழ்கடலை தங்களது வாழ்விடமாக கொண்ட திமிங்கலங்கள் கடலில் உணவுச் சங்கிலியில் ஒன்றுக்கொன்று சார்ந்து வாழ்கின்றன. நீரில் வாழும் பாலுாட்டி இனத்தைச் சேர்ந்த திமிங்கலம் வெப்ப ரத்த பிராணியாக உள்ளது. இவை நுரையீரல் மூலமே மூச்சு விடுகின்றன.

உலகம் முழுவதும் திமிங்கலங்களில் 75 வகைகள் உள்ளன. உயிரினங்களில் மிகப் பெரியதாக வளரக்கூடிய இனமாக திமிங்கலம் உள்ளது. 100 அடி நீளமும் 150 டன் எடையும் உள்ளதாக வளரக்கூடியது நீலத்திமிங்கலம். நீலத் திமிங்கலத்தின் நாக்கில் 50 பேர் வரை உட்காரக்கூடிய அளவுக்கு இடம் இருக்கும்.

இவை மூர்க்கமான குணம் கொண்டது கிடையாது. மிகவும் சாதுவானவை. திமிங்கலங்கள் நீரில் நீந்துவதற்கு ஏதுவாக தம் உடலமைப்பை இருபுறமும் கூர்மையாக மீன் போல் தகவமைத்துக் கொண்டுள்ளன. குட்டிகளுக்கு பாலுாட்டுகின்றன. மனிதர்களைப் போல திமிங்கலத்திற்கும் இதயத்தில் நான்கு அறைகள் உள்ளன. திமிங்கலத்தின் தலைப்பகுதியில் குழாய் போன்ற மேல் நோக்கிய துளை ஒன்று உள்ளது. இத்துளைகளின் வழியாக சுவாசிக்கின்றன.

இவை தங்கள் இரையைத் தேடி கடலின் நீண்ட ஆழத்திற்கு கூட செல்கின்றன. அடர்ந்த இருளில் இரையை பிடிக்க பயன்படுத்தும் எதிரொலி உத்தி மூலம் இரையின் இருப்பிடத்தை திமிங்கலம் துல்லியமாக அறிந்து கொள்கின்றன. திமிங்கலங்கள் 70 ஆண்டுகள் வரை வாழக் கூடியவை. அதிக உடல் எடை கொண்ட திமிங்கலங்கள் மிகவும் வேகமாகவும் நீந்தும்.

தாங்கள் வாயை அகலமாக திறந்து நிறைய நீரையும் அதில் உள்ள சிறிய மீன் உயிரினங்களையும் உள்ளிழுக்கின்றன. பிறகு நீரை வடிகட்டி விட்டு உணவை மட்டும் வடிகட்டி சாப்பிடுகின்றன. இனப்பெருக்க காலங்களில் ஆண் திமிங்கலம் நீண்ட இசையுடன் கூடிய சத்தங்களை தொடர்ச்சியாக எழுப்புகின்றன.

இந்த இசை ஒலி அலைகளால் கவரப்பட்ட பெண் திமிங்கலங்கள் துல்லியமாக ஆண் துணையின் இருப்பிடத்தை கண்டறிந்து வரக்கூடிய வகையில் அமைப்பை கொண்டுள்ளது.

கருவுற்ற பெண் திமிங்கலத்தின் கர்ப்ப காலம் 12 முதல் 17 மாதங்கள் வரை ஆகின்றன. பிரசவ காலத்தில் மற்ற திமிங்கலங்கள் கர்ப்பிணி திமிங்கலத்தை சூழ்ந்து கொண்டு அவை பிரசவிக்க உதவுகின்றன. நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே திமிங்கலங்கள் குட்டி போடக்கூடியவை.

திமிங்கலத்தின் வாந்தி எனப்படும் ஆம்பர் கிரீஸ் திமிங்கலம் தன் உடலின் செரிமான உறுப்பில் இருந்து வாய் வழியாக வெளியேறிய வாந்தி மற்றும் உமிழ்நீர் கடலின் மேற்பரப்பில் மிதக்கிறது. சூரிய ஒளி மற்றும் உப்பு நீரும் சேர்ந்து இந்த வாந்தியை ஆம்பர் கிரீஸ் என்னும் பொருளாக உருவாக்குகின்றன. இவை நறுமணப் பொருட்களை தயாரிக்க பயனுள்ளதாக இருக்கிறது. கருப்பு, வெள்ளை அல்லது சாம்பல் நிறத்தில் எண்ணெய் நிறைந்த பொருளாகும்.

இது நீள் வட்ட அல்லது வட்ட வடிவத்தில் காணப்படும். இது கடலில் தொடர்ந்து மிதந்து பயணம் செய்வதால் அத்தகைய வடிவத்தை பெறுகிறது. திமிங்கல வாந்தியின் மணம் கெட்ட நாற்றம் கொண்டதாக இருந்தாலும் நேரம் செல்ல செல்ல உலர்ந்த பிறகு அது நறுமணம் கொண்டதாக மாறுகிறது.

வாசனை திரவியத்தின் வாசனை காற்றில் விரைவாக கரைவதை தடுக்க ஆம்பர் கிரீஸ் ஒரு நிலைப்படுத்தியாக பயன்படுத்தப்படுகிறது.

இந்திய வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் மற்றும் விதிகளின் படி திமிங்கல வாந்தி எனப்படும் ஆம்பர் கிரீஸ் பாதுகாக்கப்பட்ட விலங்குகளின் தகுதியை பெற்றுள்ளன. இதனால் 1986ம் ஆண்டு முதல் வன பாதுகாப்புச் சட்டத்தின் இரண்டாவது அட்டவணையின் கீழ் அவற்றின் உறுப்புகளை வர்த்தகம் செய்வது அல்லது திமிங்கல ஆம்பர் கிரீசை விற்பனைக்கு உட்படுத்துவது சட்டவிரோத செயலாகும். அதற்கு தடை உள்ளது. இதனால் ஆம்பர் கிரீஸ் விலைமதிப்பற்ற பொருளாக உள்ளது. பல்வேறு சிறப்பம்சங்களையும் வாழ்வியல் தகவமைப்பையும் கொண்டதாக திமிங்கலங்கள் மன்னார் வளைகுடா கடலில் காணப்படுகிறது.






      Dinamalar
      Follow us