/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
குப்பை கொட்டும் இடமான கீழக்கரை ஹிந்துக்கள் மயானம்
/
குப்பை கொட்டும் இடமான கீழக்கரை ஹிந்துக்கள் மயானம்
ADDED : நவ 10, 2025 12:37 AM
கீழக்கரை: கீழக்கரை நகரில் ஹிந்துக்கள் மயான பகுதிகளுக்குள் குப்பை கொட்டும் இடமாக மாறி வருகிறது.
கீழக்கரை ஹிந்துக்கள் மயானத்தில் அனைத்து சமுதாய மக்களும் இறந்தவர்களை புதைத்தல், தகனம் இடுதல் ஆகியவற்றை செய்கின்றனர்.
இந்நிலையில் மயான பகுதிகளில் அதிகளவு பிளாஸ்டிக் குப்பை கழிவு உள்ளிட்டவை கொட்டும் இடமாக மாறி வருவதால் இறுதிச் சடங்கு செய்வோர் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
கீழக்கரை பா.ஜ., கிளை தலைவர் விஜய துரைப்பாண்டியன் கூறியதாவது; ஹிந்துக்கள் மயானத்தில் அதிகளவு குப்பை தேங்கி வருகிறது. இதனால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. உடலை புதைப்பதற்காக வருவோர் இடத்தை சுத்தம் செய்வதற்காக கூடுதலாக செலவழித்து அவ்விடத்தை பராமரித்து விட்டு செல்கின்றனர்.
கால்நடைகளின் இறைச்சி கழிவுகளை அப்பகுதியில் கொட்டும் போக்கு அதிகரித்து வருகிறது. எனவே நகராட்சி நிர்வாகத்தினர் ஹிந்துக்கள் மயான பகுதியில் குப்பை கொட்டுவதற்கு தடை விதிக்கவும், தேங்கிய குப்பையை அகற்றி அவ்விடத்தை பராமரிப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

