/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வீடு இடிந்தது தாய், மகன் தப்பினர்
/
வீடு இடிந்தது தாய், மகன் தப்பினர்
ADDED : அக் 16, 2024 05:38 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை, : திருவாடானை பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதில் பெரும்பாலான கிராமங்களுக்கு செல்லும் சாலைகள் சேதமடைந்துள்ளது. மழையால் ஓட்டு வீடுகள் இடிந்தன. எட்டுகுடி கிராமத்தை சேர்ந்தவர் மங்களமேரி 82. இவரது மகன் ஜெர்மான்ஸ் 47, இருவரும் நேற்று முன்தினம் இரவு துாங்கினர்.
அப்போது அவர்களின் ஓட்டு வீட்டின் ஒரு பக்கச் சுவர் மற்றும் ஓடுகள் சேதமடைந்து விழுந்தன. இருவரும் காயமின்றி தப்பினர். பேராமங்கலம், பாகனுார் உள்ளிட்ட பல்வேறு கண்மாய்கள் நிரம்பியதால் உடையும் அபாயத்தில் உள்ளது.