/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பசுமையும், குளுமையும் நிறைந்த கீழச்செல்வனுார் போலீஸ் ஸ்டேஷன் பொதுமக்கள் வரவேற்பு
/
பசுமையும், குளுமையும் நிறைந்த கீழச்செல்வனுார் போலீஸ் ஸ்டேஷன் பொதுமக்கள் வரவேற்பு
பசுமையும், குளுமையும் நிறைந்த கீழச்செல்வனுார் போலீஸ் ஸ்டேஷன் பொதுமக்கள் வரவேற்பு
பசுமையும், குளுமையும் நிறைந்த கீழச்செல்வனுார் போலீஸ் ஸ்டேஷன் பொதுமக்கள் வரவேற்பு
ADDED : பிப் 04, 2024 05:39 AM

கடலாடி : -கீழச்செல்வனுார் அருகே கிழக்கு கடற்கரை சாலை ஓரத்தில் சாயல்குடி செல்லும் வழியில் கீழ செல்வனுார் போலீஸ் ஸ்டேஷன் அமைந்துள்ளது.
இது முன்பு புறக்காவல் நிலையமாக இயங்கியது. பின்பு 2015ல் புதிதாக கட்டடம் கட்டப்பட்டு அப்போதைய முதல்வர் ஜெ., திறந்து வைத்தார்.
கீழச்செல்வனுார் போலீஸ் ஸ்டேஷன் அருகே உள்ள வளாகம் மற்றும் பின்புறம் உள்ள பக்கவாட்டு பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட மரங்கள் சூழ்ந்து காணப்படுகிறது. மா, வாழை, இலந்தை, நாவல், புளி, வேம்பு, தேக்கு, புங்கன் உள்ளிட்ட பலவகை மரங்கள் வளர்க்கப்பட்டு தற்போது பலன் தரும் நிலையில் பசுமையாக உள்ளது
ரோந்து மற்றும் பாதுகாப்பு குறித்தும் பல்வேறு வகையான பிரச்னைகளுக்கு தீர்வு காணவும் கீழச்செல்வனுார் போலீஸ் ஸ்டேஷனுக்கு பொதுமக்கள் வருகின்றனர்.
சுற்றிலும் சீமை கருவேல மரங்கள் வளர்ந்திருந்த பகுதியில் அவற்றை அகற்றிவிட்டு நிழல் தரும் மரங்கள் நடப்பட்டு முறையாக தண்ணீர் ஊற்றி பராமரிக்கும் செயலில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
பொதுமக்கள் கூறியதாவது: போலீஸ் ஸ்டேஷனுக்கு பல்வேறு பிரச்னைகளை வலியுறுத்தி வருகின்றனர். மனதிற்கு இதமாகவும், பசுமையும், குளுமையும் நிறைந்த மரங்களுக்கு மத்தியில் போலீஸ் ஸ்டேஷன் இயங்கி வருவது திருப்தி அளிக்கிறது.
கோடை காலத்திலும் முறையாக நீரூற்றி பராமரிப்பதால் இந்த அளவிற்கு மரங்கள் பலன் தரும் வகையில் உள்ளது.
சுற்றுவட்டார போலீஸ் ஸ்டேஷன்களில் கீழச்செல்வனுார் போலீஸ் ஸ்டேஷனுக்கு வரும் உயர் அதிகாரிகள் பாராட்டி செல்கின்றனர் என்றனர்.