/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அர்ச்சுனன் - திரவுபதி திருக்கல்யாணம்
/
அர்ச்சுனன் - திரவுபதி திருக்கல்யாணம்
ADDED : ஏப் 01, 2025 05:58 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை: திருவாடானையில் திரவுபதி அம்மன் கோயில் திருவிழா மார்ச் 26 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று முன்தினம் காலை பீமன் வேடம் ஊர்வலம் நடந்தது.
இரவு 7:00 மணிக்கு அர்ச்சுனன்-திரவுபதி திருக்கல்யாணம் விழா நடந்தது.
அர்ச்சுனன், திரவுபதி திருமணக் கோலத்தில் எழுந்தருளினர்.
சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க திருக்கல்யாணம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இன்று (ஏப்.1) திருவிளக்கு பூஜை, நாளை காளி வேடம், மறுநாள் திரவுபதி அம்மன் வேடம், ஏப்.,4 ல் மகாபாரதம் கலைநிகழ்ச்சி, அன்று இரவு 10:00 மணிக்கு பூக்குழி இறங்குதல், மறுநாள் கொடியிறக்கம் நடைபெறும்.