/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பராமரிப்பில்லாத தியாகிகள் பூங்கா தினமலர் செய்தியால் சுத்தமானது
/
பராமரிப்பில்லாத தியாகிகள் பூங்கா தினமலர் செய்தியால் சுத்தமானது
பராமரிப்பில்லாத தியாகிகள் பூங்கா தினமலர் செய்தியால் சுத்தமானது
பராமரிப்பில்லாத தியாகிகள் பூங்கா தினமலர் செய்தியால் சுத்தமானது
ADDED : ஆக 14, 2025 11:29 PM
திருவாடானை: ராமநாதபுரம் மாவட்டத்தில் தியாகிகள் அதிகம் வாழ்ந்த ஊராக திருவாடானை திகழ்கிறது. சுதந்திரத்திற்காக இப்பகுதி மக்கள் செய்த தியாகம் இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் இடம் பெற்றுள்ளது. தியாகிகளை நினைவு கூறும் வகையில் திருவாடானை தாலுகா முன்பு 2016ல் தியாகிகள் பூங்கா மற்றும் நினைவு துாண் கட்டப்பட்டது.
தற்போது அந்த பூங்கா பராமரிப்பு இல்லாமல் மது அருந்தும் இடமாக மாறியது. இரவில் சிலர் பூட்டை உடைத்து நுழைந்து மது அருந்தும் இடமாக மாற்றிவிட்டனர். மதுபாட்டில்கள் சிதறி கிடந்தன. இன்று சுதந்திரதின விழா நடைபெறும் நிலையில் சுத்தம் செய்யபடாமல் புதர்கள் மண்டியுள்ளது குறித்து நேற்று தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. அதனை தொடர்ந்து ஊராட்சி நிர்வாகம் சார்பில் நேற்று சுத்தம் செய்யப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். இன்று பல்வேறு தரப்பினர் தியாகிகள் நினைவு துாணுக்கு மலர் அஞ்சலி செலுத்த தயாராக உள்ளனர்.