/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஆண்டு முழுவதும் கழிவுநீர் தேங்கும் கடுகுச்சந்தை கிழக்கு கடற்கரை சாலை கண்டுகொள்ளாத ஊராட்சி நிர்வாகம்

ADDED : டிச 13, 2025 06:43 AM

சாயல்குடி: சாயல்குடி அருகே கடுகுச்சந்தை ஊராட்சி கன்னியாகுமரி -ராமேஸ்வரம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ளது.
கடுகுச்சந்தையில் சாலையோர பக்கவாட்டு பகுதியில் பிரதான குழாய்களில் இருந்து பொதுமக்களுக்கு காவிரி குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் சாலை ஓரத்தில் இருந்து சேகரமாகும் கழிவுநீர் முறையாக வாறுகாலில் செல்லாமல் அவற்றை கிழக்கு கடற்கரை சாலையில் விடுவதால் சாலை விரைவில் சேதமடைந்து விடுகிறது.
கிராம மக்கள் கூறியதாவது:
கடுகுச்சந்தை ஊராட்சி கிழக்கு கடற்கரை சாலையின் மத்தியில் உள்ளது. கழிவுநீர் செல்வதற்கு என தனியாக வாறுகால் வசதி உள்ள நிலையில் முறையாக துார்வாரப்படாமல் உள்ளது. காவிரி நீர் கசிவு அதிகளவு ஏற்பட்டு முறையாக வரத்துக்கால் வழியாக செல்லாமல் அவற்றை பிரதானமாக கிழக்கு கடற்கரை சாலையின் மத்தியில் விடுகின்றனர்.
இதனால் அவ்வழியாக வரக்கூடிய வாகனங்கள் பெரும் சிரமத்தை சந்திக்கின்றன. நடந்து செல்லும் போது அடிக்கடி கழிவு நீர் பொதுமக்களின் மீது பட்டு விபத்துக்கு வழி வகுக்கிறது. எனவே கடுகுச்சந்தை ஊராட்சி நிர்வாகத்தினர் பொதுமக்களின் நலன் கருதி கிழக்கு கடற்கரை சாலையில் கழிவுநீரை விடாமல் அவற்றை முறைப்படி வாறுகாலில் விடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கொசு உற்பத்தியை தவிர்க்க ஊராட்சி புகை மருந்து தெளித்து சுகாதாரமாக வைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.