/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கீழச்செல்வனுார் பஸ் ஸ்டாப் அருகே ஆண்டுக்கணக்கில் கழிவுநீர் தேக்கம் கண்டுகொள்ளாத ஊராட்சி

ADDED : டிச 13, 2024 04:09 AM

சாயல்குடி: சாயல்குடி அருகே கிழக்கு கடற்கரை சாலையில் கீழச்செல்வனுார் பஸ்ஸ்டாப் அருகே ஆண்டுக்கணக்கில் கழிவு நீர் தேங்கும் நிலையில் ஊராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளாமல் உள்ளது.
இப்பகுதியில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமானோர் தினமும் சாயல்குடி செல்வதற்கும் ராமநாதபுரம் உள்ளிட்ட நகரங்களுக்கு செல்வதற்கும் பஸ் ஏறுகின்றனர். இங்குள்ள பயணிகள் நிழற்குடை அருகே ஆண்டுக்கணக்கில் தேங்கும் கழிவு நீரால் அப்பகுதி கொசுக்கள் உற்பத்தியாகும் இடமாக மாறி வருகிறது.
கிழக்கு கடற்கரைச் சாலை வழியாகச் செல்லும் கழிவு நீர் அப்பகுதியில் உள்ள சாலையை சேதமடைய செய்கிறது. வாகன ஓட்டிகள் அச்சமடைகின்றனர்.
பா.ஜ., மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் மதன் ராஜா: கீழச்செல்வனுார் பயணியர் நிழல் குடை அருகே எல்லா காலங்களிலும் பஸ் ஸ்டாப் ஒட்டியே கழிவுநீர் தேங்குகிறது. பயணிகள் மூக்கை பிடித்துக் கொண்டு பஸ் ஏற வேண்டிய அவல நிலை உள்ளது. நேற்று பெய்த தொடர் மழையால் கழிவு நீருடன் மழை நீர் சேர்ந்து அப்பகுதி முழுவதும் சூழ்ந்துள்ளது. கீழச்செல்வனுார் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.