ADDED : பிப் 22, 2024 11:24 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை : திருவாடானை அருகே ஆலம்பாடியில் ஒட்டுடைய காளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில்சாமி கும்பிடுவது சம்பந்தமாக இரு தரப்பினரிடையே பிரச்னை ஏற்பட்டது. திருவாடானை தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் கார்த்திகேயன் தலைமையில் சமாதான கூட்டம் நடந்தது.
இரு தரப்பினரும் ஒற்றுமையாக சாமி கும்பிட அதிகாரிகள் வலியுறுத்தினர். இதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் மீண்டும் மற்றொரு நாளில் சமாதானக் கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.