/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
குறைவழுத்த மின்சாரத்தால் கீழச்சாக்குளம் மக்கள் சிரமம்
/
குறைவழுத்த மின்சாரத்தால் கீழச்சாக்குளம் மக்கள் சிரமம்
குறைவழுத்த மின்சாரத்தால் கீழச்சாக்குளம் மக்கள் சிரமம்
குறைவழுத்த மின்சாரத்தால் கீழச்சாக்குளம் மக்கள் சிரமம்
ADDED : பிப் 10, 2025 04:24 AM
முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே கீழச்சாக்குளம் கிராமத்தில் குறைவழுத்த மின்சாரத்தால் மக்கள் சிரமப்படுகின்றனர்.
முதுகுளத்துார் அருகே கீழச்சாக்குளம் கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். முதுகுளத்துார் துணை மின் நிலையத்திலிருந்து மின்சப்ளை செய்யப்படுகிறது. இங்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கண்மாய் கரை அருகே அமைக்கப்பட்டுள்ள டிரான்ஸ்பார்மர் மூலம் கிராமத்திற்கு மின்சப்ளை செய்யப்படுகிறது.
கடந்த சில நாட்களாக கிராமத்திற்கு வரும் மின்சாரம் அளவு குறைந்தளவு வருவதால் எலக்ட்ரிக் பொருட்கள் உள்ளிட்ட மின்சார பொருட்கள் பயன்படுத்த முடியாமல் மக்கள் சிரமப்படுகின்றனர். இதே போன்று கீழச்சாக்குளம் ஒத்தவீடு பகுதியில் 40க்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் உள்ளது. குறைந்தளவு மின்சாரத்தால் வீடுகளில் உள்ள எலக்ட்ரிக் பொருட்களும் வீணாகிறது. இன்வெர்ட்டர் பயன்படுத்தவும் முடியவில்லை. தினந்தோறும் மின்சாரம் இல்லாமல் அவதிப்படும் நிலை உள்ளது.
அதிகாரிகள் ஆய்வு செய்து கிராமத்திற்கு கூடுதல் டிரான்ஸ்பார்மர் அமைத்து போதுமான அளவு மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.