/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அடிப்படை வசதிகள் இல்லை அவதியில் வைகை நகர் மக்கள்
/
அடிப்படை வசதிகள் இல்லை அவதியில் வைகை நகர் மக்கள்
ADDED : செப் 26, 2024 04:42 AM

ராமநாதபுரம்: பேராவூர் ஊராட்சி வைகை நகர் கிழக்கு தங்கப்பாபுரத்தில் குடிநீர், ரோடு, கழிப்பறை, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளின்றி மக்கள் சிரமப்படுகின்றனர்.
தங்கப்பாபுரத்தில் 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ள ரோடு சேதமடைந்துள்ளதால் மழை பெய்தால் தண்ணீர் தேங்கி நிற்கிறது. கொசுத்தொல்லையால் வயதானவர்கள், சிறுவர்கள் காய்ச்சலால் சிரமப்படுகின்றனர். இது தொடர்பாக புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என மக்கள் குற்றம் சாட்டினர்.
அப்பகுதி மக்கள் கூறுகையில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக தங்கப்பாபுரத்தில் வசிக்கிறோம். ரோடு வசதியின்றி ஆட்டோ வர மறுக்கின்றனர். தெரு விளக்கு இல்லாததால் போதை ஆசாமிகள் தொல்லையால் பெண்கள் நடந்து செல்ல அச்சப்படுகிறோம். குப்பைத் தொட்டி, குடிநீர், ரோடு, தெருவிளக்கு உள்ளிட்ட வசதிகளை ஊராட்சி நிர்வாகம் செய்து தர வேண்டும்.
அதற்கு கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உத்தரவிட வேண்டும் என்றனர்.