/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ரேஷன் கடைகளில் பனை வெல்லம் விற்கும் திட்டம் மூன்றாண்டாக கிடப்பில் பனைத்தொழிலாளர்கள் வேதனை
/
ரேஷன் கடைகளில் பனை வெல்லம் விற்கும் திட்டம் மூன்றாண்டாக கிடப்பில் பனைத்தொழிலாளர்கள் வேதனை
ரேஷன் கடைகளில் பனை வெல்லம் விற்கும் திட்டம் மூன்றாண்டாக கிடப்பில் பனைத்தொழிலாளர்கள் வேதனை
ரேஷன் கடைகளில் பனை வெல்லம் விற்கும் திட்டம் மூன்றாண்டாக கிடப்பில் பனைத்தொழிலாளர்கள் வேதனை
ADDED : நவ 08, 2024 02:25 AM

ராமநாதபுரம்:ரேஷன் கடைகளில்பனை வெல்லம் விற்கப்படும் என தமிழக அரசு அறிவித்து மூன்றாண்டுகளாகியும் செயல்படுத்தப்படவில்லை என பனைத்தொழிலாளர்கள் வேதனை தெரிவித்தனர்.
தமிழகத்தில் மாநில மரமாக பனை மரம் உள்ளது.பனை மரத்தின் அடி முதல் நுனி வரை அனைத்து பாகங்களும் மக்களுக்கு பயன்படுகிறது. திருநெல்வேலி, துாத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில் பனை தொழிலாளர்கள் அதிகம் உள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் சாயல்குடி, மாரியூர், கன்னிராஜபுரம், மேலக்கிடாரம், கடலாடி, கமுதி, ரெகுநாதபுரம், பனைக்குளம் உள்ளிட்ட பல இடங்களில் பனங்கருப்பட்டி தயாரிக்கும் பணியில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இவர்களிடம் மொத்த வியாபாரிகள் கிலோ ரூ.160 முதல் ரூ.180 வரை தரத்திற்கு ஏற்ப வாங்கி வெளி மார்க்கெட்டில் ரூ.250 முதல் ரூ.280க்கு விற்கின்றனர். ஆண்டுதோறும் கருப்பட்டிக்கு எதிர்பார்த்த விலை கிடைக்காமல் தொழிலாளர்கள் இழப்பை சந்திக்கின்றனர்.
ராமநாதபுரம் பனைத்தொழிலாளர் சங்க மாவட்டஒருங்கிணைப்பாளர் பெத்துராஜ் கூறியதாவது:
ஏப்., முதல் ஜூன் வரை பனங்கருப்பட்டி சீசன் உள்ளது. ஒரு கிலோ தரமான பனங்கருப்பட்டி தயாரிக்க ரூ.150 வரை செலவாகும். மொத்த வியாபாரிகள் 10 கிலோ சிப்பத்தை ரூ.1600 முதல் ரூ.1700க்குதான் வாங்குகிறார்கள். பனைத்தொழிலாளர்கள் எதிர்பார்த்த விலையின்றி பாதிக்கப்படுகின்றனர்.
ரேஷனில் கருப்பட்டி விற்பனை செய்யப்படும் என தமிழக அரசு 2021ல் அறிவித்தது. குறிப்பிட்ட காதி நிறுவனங்கள், சில ரேஷன் கடைகள் விற்றனர்.
அதன் பிறகு திட்டத்தை விட்டுவிட்டனர். எனவே பனங்கருப்பட்டியை அரசு கொள்முதல் செய்து அனைத்து ரேஷன் கடைகளில் விற்க வேண்டும் என்றார்.