/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தேர்தல் புறக்கணிக்கும் பகுதிகள் போலீசார் தீவிர கண்காணிப்பு
/
தேர்தல் புறக்கணிக்கும் பகுதிகள் போலீசார் தீவிர கண்காணிப்பு
தேர்தல் புறக்கணிக்கும் பகுதிகள் போலீசார் தீவிர கண்காணிப்பு
தேர்தல் புறக்கணிக்கும் பகுதிகள் போலீசார் தீவிர கண்காணிப்பு
ADDED : மார் 14, 2024 10:51 PM
திருவாடானை, - திருவாடானை சட்டசபை தொகுதியில் அடிப்படை பிரச்னைகளை காரணம் காட்டி தேர்தல் புறக்கணிப்பு பகுதி உள்ளதா என போலீசார் விசாரிக்கின்றனர்.
லோக்சபா தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் ராமநாதபுரம் லோக்சபா தொகுதி களை கட்டத் துவங்கியுள்ளது. தொகுதிக்கு உட்பட்ட திருவாடானை சட்டசபை தொகுதியில் திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம், தொண்டி, தேவிபட்டினம், திருப்பாலைக்குடி, எஸ்.பி.பட்டினம், ராமநாதபுரத்தில் சில பகுதிகள் உள்ளன.
இந்நிலையில் தேர்தல் புறக்கணிப்பு, அரசு மீது அதிருப்தி, வேட்பாளர்களுக்கு பிரச்னைகளாக உருவெடுக்கும் மக்கள் பிரச்னைகள் என தேர்தல் புறக்கணிப்பாக மாறுவது வழக்கமாக நடைபெறும். அந்த வகையில் இத்தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் அடிப்படை பிரச்னைகள் தீராமல் உள்ளது.
அந்த பிரச்னைகளை முன்வைத்து தேர்தல் புறக்கணிப்பு செய்யக்கூடாது என போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இத்தொகுதியில் குடிநீர், ரோடு வசதி போன்ற அடிப்படை பிரச்னைகளை தீர்க்க தேர்தலை புறக்கணிக்கும் போராட்டங்கள் நடைபெற வாய்ப்பு இருக்கிறதா என போலீசார் விசாரிக்கின்றனர்.

