ADDED : ஜூன் 11, 2025 11:09 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை: திருவாடானை அருகே ஆக்களூர் கிராமத்தில் வயல்காட்டு வழியாக மின்கம்பங்கள் உள்ளன. நேற்று முன்தினம் பலத்த காற்று வீசியதில் ஒரு மின்கம்பம் முறிந்தது. மின்வாரிய ஊழியர்கள் மின்சப்ளையை தடை செய்து சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இப்பகுதியில் சேதமடைந்த மின்கம்பங்கள்நிறைய இருப்பதால் அக் கம்பங்களை அகற்றி புதிய மின்கம்பங்களை அமைக்க வேண்டும் என்று கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.