/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தடுப்புச்சுவர் துார்ந்து போனதால் சேறும் சகதியுமாக மாறிய ரோடு
/
தடுப்புச்சுவர் துார்ந்து போனதால் சேறும் சகதியுமாக மாறிய ரோடு
தடுப்புச்சுவர் துார்ந்து போனதால் சேறும் சகதியுமாக மாறிய ரோடு
தடுப்புச்சுவர் துார்ந்து போனதால் சேறும் சகதியுமாக மாறிய ரோடு
ADDED : நவ 26, 2025 04:36 AM

முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே கூவர்கூட்டம் கிராமத்தில் கண்மாய் தடுப்புச்சுவர் துார்ந்து போனதால் சேறும் சகதியுமாக நடப்பதற்கு லாயக்கற்ற ரோடாக மாறியுள்ளது.
முதுகுளத்துார் அருகே கூவர்கூட்டம் கிராமத்தில் 70க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். கூவர்கூட்டம் விலக்கு ரோட்டில் இருந்து 500 மீட்டரில் உள்ளது.
இங்கு ரோட்டோரத்தில் கண்மாய் கரை உள்ளதால் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு மணல் அரிப்பு ஏற்படாமல் இருப்பதற்காக தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டது. பின்பு முறையாக மராமத்து பணி செய்யப்படாதால் தற்போது தடுப்புச்சுவர் சிமென்ட் பூச்சு பெயர்ந்து துார்ந்துள்ளது.
மழை பெய்தால் கண்மாய் கரையில் மணல் அரிப்பு ஏற்பட்டு ரோடு முழுவதும் சேறும் சகதியுமாக மாறி உள்ளது. இதனால் நடப்பதற்கு லாயக்கற்ற ரோடு மாறி உள்ளது. டூவீலரில் செல்பவர்கள் அடிக்கடி வழுக்கி விழுந்து காயமடைகின்றனர்.ரோட்டில் நடப்பதற்கு மக்கள் சிரமப்படுகின்றனர்.
எனவே கண்மாய் கரையில் தடுப்புச்சுவர் அமைக்கவும், ரோட்டை பராமரிப்பு பணி செய்ய வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

