/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
டிச.18ல் ஆர்.டி.ஓ., அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் தொழிற்சங்க கூட்டத்தில் முடிவு

ADDED : டிச 08, 2025 06:33 AM
பரமக்குடி: பரமக்குடி உதவி கைத்தறி இயக்குனர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆர்.டி.ஓ., அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்த அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
பரமக்குடி ஏ.ஐ.டி.யு.சி., அலுவலகத்தில் அனைத்து தொழிற்சங்க இயக்க நிர்வாக குழு, நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் பெடரேஷன், கிளார்க் யூனியன் நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. பெடரேஷன் சங்க தலைவர் சேசய்யன் தலைமை வகித்தார்.
உதவி கைத்தறி இயக்குனர் சேரன் நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் அராஜக போக்கில் ஈடுபடுகிறார். இவர் மீது நடவடிக்கை எடுக்கவும், பணி மாற்றம் செய்து துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். கோரிக்கைகளை வலியுறுத்தி டிச.,18ல் ஆர்.டி.ஓ., அலுவலகம் முன்பு அனைத்து இயக்கங்கள் மற்றும் நெசவாளர்களை திரட்டி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட தீர்மானிக்கப்பட்டது.
பெடரேஷன் நிர்வாகிகள் கோதண்டராமன், ருக்மாங்கதன், போராட்ட குழுவினர் பெருமாள், ராஜன், சுப்பிரமணியன், குப்புசாமி, முரளி, சேதுராமன், காசிவிஸ்வநாதன், கங்காதரன் பங்கேற்றனர்.