/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சிறப்பு பஸ் பெயரளவில் இயக்கம் பஸ் ஸ்டாண்டில் பயணிகள் தவிப்பு
/
சிறப்பு பஸ் பெயரளவில் இயக்கம் பஸ் ஸ்டாண்டில் பயணிகள் தவிப்பு
சிறப்பு பஸ் பெயரளவில் இயக்கம் பஸ் ஸ்டாண்டில் பயணிகள் தவிப்பு
சிறப்பு பஸ் பெயரளவில் இயக்கம் பஸ் ஸ்டாண்டில் பயணிகள் தவிப்பு
ADDED : ஜன 18, 2024 05:48 AM
பரமக்குடி: -பரமக்குடி, மதுரை பஸ்கள் பலவும் சென்னைக்கு சிறப்பு பஸ்களாக இயக்கப்பட்டதால், ராமநாதபுரம், பரமக்குடியில் பஸ் ஸ்டாண்ட்களில் நீண்டநேரம் காத்திருந்து பயணிகள் சிரமப்பட்டனர்.
பொங்கல் விடுமுறை முடிந்து நேற்று பலர் மீண்டும் சொந்தூர், பணியிடங்களுக்கு புறபட்டனர். இந்நிலையில் பரமக்குடி, ராமநாதபுரம் பஸ் ஸ்டாண்ட் இருந்து போதிய சிறப்பு பஸ் இயக்கப்படாததால் பயணிகள் நீண்டநேரம் காத்திருந்து சிரமபட்டனர்.
இதுகுறித்து அரசு போக்குவரத்து ஊழியர்களிடம் கேட்டபோது சென்னை உள்ளிட்ட பெருநகரங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டுள்ளன.
இதனால் மதுரை, ராமேஸ்வரம் வழித்தடத்தில் பஸ்கள் குறைந்த அளவே செல்கிறது என்றனர்.
விடுமுறை மற்றும் விழா காலங்களில் சிறப்பு பஸ்களை வழக்கமாக இயங்கும் வழித்தடத்தில் இயக்க அரசு போக்குவரத்து கழக உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.