/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ரோட்டை மறைக்கும் சீமைக்கருவேல மரங்கள்
/
ரோட்டை மறைக்கும் சீமைக்கருவேல மரங்கள்
ADDED : செப் 11, 2025 10:48 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை; மதுரை- தொண்டி தேசிய நெடுஞ்சாலையை மறைக்கும் சீமைக்கருவேல மரங்களை விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. மதுரை- தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் தினமும் வாகன போக்குவரத்து அதிகமாக இருக்கும். இதில் திருவாடானையில் இருந்து தொண்டிக்கு செல்லும் ரோட்டில் சில இடங்களில் வளைவான இடங்கள் உள்ளன. காடாங்குடி, பழயணக்கோட்டை, பெருமானேந்தல், புதுக்குடி உள்ளிட்ட பல்வேறு வளைவான இடங்களில் சீமைகருவேல மரங்கள் அடர்ந்து சாலையை மறைக்கிறது.
இதனால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. சீமைக்கருவலத்தை அகற்ற தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.