/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
புண்ணிய ஸ்தலங்களில் வழிகாட்டி பலகை வைக்காத சுற்றுலாத் துறை மனமில்லாத அதிகாரிகள்

ADDED : அக் 23, 2024 04:20 AM

உத்தரகோசமங்கை : திருப்புல்லாணி, சேதுக்கரை, உத்தரகோசமங்கை, ஏர்வாடி தர்கா உள்ளிட்ட புண்ணிய ஸ்தலங்களில் சுற்றுலாத் துறை சார்பில் வைக்கப்படும் வழிகாட்டி விபரப் பலகை இல்லாத நிலை உள்ளது.
மாநில அரசின் சுற்றுலாத் துறை சார்பில் 15 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட வழிகாட்டிப் பலகை பொலிவிழந்து சேதமடைந்துள்ளது. சுற்றுலாப் பயணிகள் கூறியதாவது: ராமநாதபுரம் மாவட்டம் பொழுது போக்கு அம்சங்கள் மற்றும் சுற்றுலாத்தலங்கள், புண்ணிய தலங்கள், வரலாற்றுச் சின்னங்கள் நிறைந்த பகுதி.
இங்கு சுற்றுலா துறை சார்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மேம்படுத்துவதற்கான எவ்வித முயற்சியும் எடுக்காமல் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உள்ளனர்.மாவட்ட அலுவலகம் ராமேஸ்வரத்தில் சுற்றுலாத்துறை அலுவலமாக இயங்கி வருகிறது. புண்ணிய தலங்கள் மற்றும் சுற்றுலா பகுதிகளுக்குச் செல்லும் முழு விபரங்கள் அடங்கிய விபர வரைபடம் சம்பந்தப்பட்ட புண்ணிய ஸ்தலங்களில் வைக்கப்படாமல் உள்ளது. பெரும்பாலான இடங்களில் சேதமடைந்துள்ளது.
இதனால் சுற்றுலாப் பயணிகள் வரலாறு, பெருமையை அறிந்து கொள்ள முடியாத நிலை உள்ளது. எனவே மாவட்ட சுற்றுலா துறையினர் வழிகாட்டி பெயர் பலகையை வைக்க வேண்டும். அந்தந்த தலங்களின் சிறப்புகள் குறித்தும் துாரம் குறித்த விவரங்களையும் வைத்தால் பயனுள்ளதாக இருக்கும் என்றனர்.