/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பூட்டிய அறையில் நடந்த பேரூராட்சி கவுன்சில் கூட்டம்
/
பூட்டிய அறையில் நடந்த பேரூராட்சி கவுன்சில் கூட்டம்
பூட்டிய அறையில் நடந்த பேரூராட்சி கவுன்சில் கூட்டம்
பூட்டிய அறையில் நடந்த பேரூராட்சி கவுன்சில் கூட்டம்
ADDED : நவ 15, 2025 04:56 AM
கமுதி: கமுதி பேரூராட்சி கவுன்சில் கூட்டத்தில் பத்திரிகையாளர்கள் யாரையும் அனுமதிக்காமல் பூட்டிய அறைக்குள் கூட்டம் நடந்தது.
கமுதி பேரூராட்சி கவுன்சில் கூட்டம் தலைவர் அப்துல் வஹாப் சகாராணி தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் சவேரியார் அடிமை, செயல் அலுவலர் யசோதா முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் 28 தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு விவாதம் நடந்தது. இதில் கமுதி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்கக் கோரி கவுன்சிலர் சத்யஜோதி கேள்வி எழுப்பினார்.
அப்போது வெளியில் உள்ள பத்திரிகையாளர்கள் புகைப்படம் எடுத்த போது பேரூராட்சி பணியாளர்கள் உள்ளே விடாமல் தடுத்து அறையை பூட்டினர். பின்பு கவுன்சிலர் கூட்டம் பூட்டிய அறைக்குள் நடந்தது. பேரூராட்சி அலுவலகத்தில் துாய்மை பணியாளர்கள் பிரச்னை, கால்வாய் உட்பட பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காணாமல் இருப்பதால் அதுகுறித்து கவுன்சிலர்கள் கேள்வி எழுப்பினர். இதையடுத்து நேற்று நடைபெற்ற கவுன்சில் கூட்டம் பூட்டிய அறைக்குள் நடந்துள்ளது.

