/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கீழே கிடந்த பர்ஸ்சை ஒப்படைத்த இளைஞர்
/
கீழே கிடந்த பர்ஸ்சை ஒப்படைத்த இளைஞர்
ADDED : ஆக 17, 2025 12:23 AM

முதுகுளத்துார்: முதுகுளத்துார் பஸ் ஸ்டாண்ட் அருகே ரோட்டில் கிடந்த பர்ஸ்சை உரியவரிடம் ஒப்படைத்த இளைஞர் கருப்புசாமியை போலீசார்,பொதுமக்கள் பாராட்டினர்.
கமுதி அருகே ராமசாமிபட்டியை சேர்ந்த மலர் 45, அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக முதுகுளத்துார் வந்தார். கையில் வைத்திருந்தத பர்ஸ் தொலைந்தது. இதில் ரூ.5000 இருந்துள்ளது.
இந்நிலையில் முதுகுளத்துாரில் வெல்டிங் கடையில் வேலை பார்க்கும் இளைஞர் கருப்புசாமி பஸ் ஸ்டாண்ட் அருகே கீழே கிடந்த பர்ஸ்சை எடுத்து புறக் காவல் நிலையத்தில் உள்ள போலீசாரிடம் ஒப்படைத்தார்.
பின் போலீசார் ஒலிபெருக்கி மூலம் தகவல் தெரிவித்து பர்ஸ் தொலைத்த மலரிடம் முதுகுளத்துார் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் முன்னிலையில் கருப்புசாமி ஒப்படைத்தார். உடன் எஸ்.ஐ., சங்கர் உட்பட போலீசார் இருந்தனர். கீழே கிடந்த பர்ஸ்சை எடுத்து கொடுத்த இளைஞரை பொதுமக்கள், போலீசார் பாராட்டினர்.