/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சேதுக்கரை கடலில் தீர்த்தவாரி உற்ஸவம்
/
சேதுக்கரை கடலில் தீர்த்தவாரி உற்ஸவம்
ADDED : ஏப் 13, 2025 05:27 AM

திருப்புல்லாணி : திருப்புல்லாணி ஆதி ஜெகநாதப் பெருமாள் கோயிலில் பங்குனி பிரம்மோற்ஸவ விழாவை முன்னிட்டு நேற்று காலை 9:00 மணிக்கு சேதுக்கரை மன்னார் வளைகுடா கடலில் தீர்த்தவாரி உற்ஸவம் நடந்தது.
திருப்புல்லாணியில் இருந்து அலங்கரிக்கப்பட்ட கருட வாகனத்தில் கல்யாண ஜெகநாத பெருமாள், அனுமன் வாகனத்தில் பட்டாபிஷேக ராமரும் சேதுக்கரை சேது பந்தன் ஜெய வீர ஆஞ்சநேயர் சன்னதி முன்பு வந்தனர். திருப்புல்லாணி கோயில் ஸ்தானிக பட்டாச்சாரியார்களால் சக்கரத்தாழ்வார் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சேதுக்கரை கடலில் தீர்த்தவாரி உற்ஸவம் நடந்தது.
பக்தர்களின் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.
நாலாயிர திவ்ய பிரபந்த பாடல்கள் பாடப்பட்டன. நேற்று மதியம் அங்கிருந்து கிளம்பி திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலை வந்தடைந்தனர். இரவில் சந்திர பிரபை வாகனத்தில் வீதி உலா நடந்தது. இன்று உற்ஸவ சாந்தியுடன் விழா நிறைவடைகிறது.
--