ADDED : அக் 29, 2024 04:54 AM
தொண்டி: தொண்டி கிழக்கு கடற்கரை சாலையில் சோலார் மின்விளக்குகள் திருடப்படுவதால் ரோடு இருளில் மூழ்கியுள்ளது.
தொண்டி கிழக்கு கடற்கரை சாலையில் எஸ்.பி.பட்டினம் முதல் தேவிபட்டினம் வரை பல இடங்களில் சூரிய சக்தியால் இயங்கும் சோலார் மின்விளக்குகள் அமைக்கப்பட்டன.
இதனால் வாகன ஓட்டிகள் சிரமம் இன்றி பயணம் செய்தனர். சில மாதங்களாக சோலார் அமைக்கப்பட்ட கம்பங்களில் இருந்து பேட்டரிகள் மற்றும் விளக்குகள் திருடப்படுகிறது.
தொண்டி மக்கள் கூறுகையில், தொண்டி முதல் தேவிபட்டினம் வரை நிறைய இடங்களில் சோலார் மின் விளக்குகள் அமைக்கப்பட்டன. வாகன ஓட்டிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. நாளடைவில் போதுமான பராமரிப்பு இல்லாததால் பெரும்பாலான விளக்குகள் எரியவில்லை.
இந்நிலையில் திருட்டு கும்பல் இரவில் கம்பங்களில் உள்ள பேட்டரி மற்றும் விளக்குகளை திருடிச் செல்கின்றனர். போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.