/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
உத்தரகோசமங்கையில் தேய்பிறை பஞ்சமி
/
உத்தரகோசமங்கையில் தேய்பிறை பஞ்சமி
ADDED : ஜூலை 15, 2025 10:23 PM

உத்தரகோசமங்கை; - உத்தரகோசமங்கை வராகி அம்மன் கோயிலில் தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.
பித்ருக்களின் சாப விமோசனம் பெறவும், பில்லி சூனியத்தின் பாதிப்பில் இருந்து நிவாரணம் பெறவும் ஏராளமானோர் இக்கோயிலுக்கு வருகின்றனர். முன்னதாக மூலவர் வராகி அம்மனுக்கு 16 வகை அபிஷேகம் அலங்கார தீபாராதனைகள் நடந்தது.
கோயில் வளாகத்தில் உள்ள நுாறுக்கும் மேற்பட்ட அம்மி கல்லில் பெண்கள் பச்சை விரலி மஞ்சள் அரைத்து உருண்டையாக பிடித்து அரைத்துக் கொண்டு வந்தனர். தேங்காய், எலுமிச்சம்பழம் உள்ளிட்டவைகளால் விளக்கேற்றி வழிபாடு செய்தனர். வராகி அம்மனுக்கு காய், கனிகள், வஸ்திரம் உள்ளிடவைகள் நெய்வேத்தியமாக படைக்கப்பட்டது. நீண்ட வரிசையில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.