/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கீழக்கிடாரம் கண்மாயில் தனி நபர்கள் ஆக்கிரமிப்பு தண்ணீர் சேமிக்க வழியில்லை
/
கீழக்கிடாரம் கண்மாயில் தனி நபர்கள் ஆக்கிரமிப்பு தண்ணீர் சேமிக்க வழியில்லை
கீழக்கிடாரம் கண்மாயில் தனி நபர்கள் ஆக்கிரமிப்பு தண்ணீர் சேமிக்க வழியில்லை
கீழக்கிடாரம் கண்மாயில் தனி நபர்கள் ஆக்கிரமிப்பு தண்ணீர் சேமிக்க வழியில்லை
ADDED : செப் 25, 2025 04:21 AM
சிக்கல் : சிக்கல் அருகே கீழக்கிடாரம் பாசனக் கண்மாய் தனி நபர்களின் ஆக்கிரமிப்பில் உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
சிக்கல் அருகே கீழக்கிடாரம் பாசன கண்மாய் 2850 ஏக்கர் பரப்பளவு கொண்டது. கண்மாய் வடக்கு பகுதியில் உள்ள வரத்து கால்வாய் இடங்களில் ஒவ்வொரு ஆண்டும் பருவ மழைக் காலங்களில் தண்ணீர் வரத்து செல்லாத அளவிற்கு துார்ந்து போய் உள்ளது. கண்மாயை துார்வாரி பல ஆண்டுகள் ஆகியும் மழைக்காலங்களில் தண்ணீர் சேமிக்க வழியின்றி உள்ளது.
புதிய தமிழகம் கட்சியின் ஒன்றிய செயலாளர் லாசர் கூறியதாவது:
கீழக்கிடாரம் கண்மாய் பாசனத்தை நம்பி நுாற்றுக்கணக்கான விவசாய நிலங்கள் உள்ளன. இந்நிலையில் தனி நபர்கள் பாசன கண்மாயின் பெரும்பகுதியை ஆக்கிரமித்து அவற்றில் விவசாயம் செய்கின்றனர். இதுகுறித்து கடலாடி தாலுகா அலுவலகத்திற்கு புகார் மனு அனுப்பியும் எந்த நடவடிக்கையும் இல்லை. கண்மாயை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கீழக்கிடாரம் கண்மாய் கரைப்பகுதியில் அடர்ந்து வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றி கரைப்பகுதிகளை பலப்படுத்த வேண்டும். மழைக்காலத்திற்கு முன்பு இவற்றைச் செய்ய வேண்டும். கண்மாயின் நீர்பிடிப்பு பகுதிக்குள் ஆக்கிரமிப்பு செய்து விவசாயம் செய்யும் போக்கு தொடர்கிறது. கிராம உதவியாளர், வி.ஏ.ஓ., ஆர்.ஐ., மெத்தனமாக உள்ளனர்.
இவற்றிற்கு ஆரம்பத்திலேயே முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். கடலாடி வருவாய்த் துறையினர் கண்மாய் பாசன துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.